முகலிங்கம் முகலிங்கேஸ்வரர் கோயில் 6: மதில் விமானங்கள் மூன்று, கல்வெட்டுகள்

உள் மதிலில் மூலை விமானங்களுக்கு இடையில் தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளில் திசைக்கு ஒன்றாக மூன்று காகர வகை விமானங்கள் (திராவிட சாலை போன்ற மஸ்தகத்தை உடையவை) அமைந்துள்ளன.

தெற்கு காகர விமானம்
(படம் நன்றி: G.N. Subrahmanyam, CC0, via Wikimedia Commons)

தெற்கு காகர விமானம்
(படம் நன்றி: G.N. Subrahmanyam, CC0, via Wikimedia Commons)

மேற்கு மதில் காகர விமானம்

வடக்கு மதில் காகர விமானம்

வாயிலைச் சுற்றி சப்தகன்னியர்
இடது பக்கம் கீழிருந்து மேலாக: 1. வாயிற்காவல் பெண் நான்கு கைகள், அவற்றில் சூலம், கபாலம், நாகம். 
2. பிராம்மி. சப்த கன்னியர் அனைவருக்கும் 4 கைகள், வலது முன் கை வரத ஹஸ்தம். இடது கை தொடை மீது. பின் கைகளில் ஆயுதங்கள். சுகாசனத்தில் அமர்ந்துள்ளனர். இருக்கையின் முன்னால் அவர்களது வாகனங்கள். இங்கு அன்னம். மூன்று தலைகள். வலது பின் கையில் தாமரை. இடது பின் கை தெளிவில்லை.
3. மகேஸ்வரி - ரிஷபம், பின் கைகளில் அக்க மாலை, சூலம்.
உத்தரத்தில் இடமிருந்து வலமாக: 4. கௌமாரி - மயில், ஆயுதங்கள் தெளிவில்லை,
5.வைஷ்ணவி - கருடன், சக்கரம், சங்கு.
6. துவார லலாட பிம்பத்தில் கஜலட்சுமி. வழக்கத்துக்கு மாறாக சுகாசனம், இரு கைகள் மட்டுமே, இடது கையில் மலர், வலது கை தொடை மீது
7. வராகி - பன்றி முகம், எருமை, இவர் மட்டும் லலிதாசனத்தில் அமர்ந்துள்ளார். இடது பின் கையில் பாசம் வலது பின் கை ஆயுதம் தெளிவில்லை. முன் கை அபயம்.
8. இந்திராணி - யானை, இடது முன் கையில் வஜ்ரம்.
வலது பக்கம் மேலிருந்து கீழாக: 9. சாமுண்டிக்கான இடம். இருவர் இருப்பது போல உள்ளது, தெளிவில்லை.
10. லலிதாசனத்தில் கணேசர், மூஞ்சூறு, 
11. வாயிற்காவல் பெண்.
(படம் நன்றி: G.N. Subrahmanyam, CC0, via Wikimedia Commons)

மகேஸ்வரர் - மதில் சிற்பம். வடக்கு காகர விமானத்திற்கு மேற்கில்.
சிவன் சுகாசனத்தில், உமை அவர் மடி மீது உத்குடிகாசனத்தில். சிவனுக்கு ஜடாமகுடம், உமைக்கு ஜடாபந்தம்.
இரு கை உமையின் வலது கை சிவன் தோள் மீது. இடது கையில் ? ஆடி. தாவணி அணிந்துள்ளார்.
சிவன் இடது முன் கை உமையை அணைத்து இடது முலையைத் தொட்டுள்ளது. வலது முன் கை அபயமாக மார்பின் முன். வலது பின் கையில் சூலம். இருவர் தலைகளுக்கு இடையில் உள்ள இடது கையில் அக்க மாலை.
சிவன் காலடியில் ரிஷபம், உமையின் காலடியில் சிங்கம். அதன் பின்னால் மனைவியோடு ஒரு முனிவரும் ரிஷபத்தின்  பின்னால் ஒரு அடியவரும் வணங்கி அமர்ந்திருக்கின்றனர்.


ஜகமோஹனம் முன்பு ஒரு சிறு விமானம்
(படம் நன்றி: G.N. Subrahmanyam, CC0, via Wikimedia Commons)

கல்வெட்டுகள்

முகலிங்கேஸ்வரர் கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.  பழைய நகரி லிபியில் அமைந்தவை. அவற்றில் இறைவன் பெயர் மதுகேஸ்வரர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  கல்வெட்டுகளில் பெரும்பாலானவை கீழை கங்க மன்னன் அனந்தவர்மன் (பொ.ஆ. 1078 - 1150) சோடகங்கனுடையவை. அவனது தானங்கள் பற்றியவை.  இந்த கல்வெட்டுகள் அவன் காலத்தில் இங்கு சோழர்களின் இருப்பு இருந்ததை காட்டுகிறது. அவன் தாய் ராஜேந்திர சோழனின் பேத்தி. ஒரு கல்வெட்டு அனர்த்தவர்மன் சோடங்கனின் தாத்தாவான அனந்தவர்மன் வஜ்ரஹஸ்தனின் அரசி கொடுத்த தானத்தை பற்றியது

மற்ற பாகங்கள்






Comments

Popular posts from this blog

முகலிங்கம் முகலிங்கேஸ்வரர் கோயில் 1 - இடம், மதில்கள், நுழைவாயில்கள்

முகலிங்கம் முகலிங்கேஸ்வரர் கோயில் 3 : ஜகமோஹனம் - 2: வடக்குப் பகுதி

முகலிங்கம் முகலிங்கேஸ்வரர் கோயில் 2 - ஜகமோஹனம் - 1 கிழக்கு, தெற்குப் பகுதிகள்