Posts

முகலிங்கம் முகலிங்கேஸ்வரர் கோயில் 6: மதில் விமானங்கள் மூன்று, கல்வெட்டுகள்

Image
உள் மதிலில் மூலை விமானங்களுக்கு இடையில் தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளில் திசைக்கு ஒன்றாக மூன்று காகர வகை விமானங்கள் (திராவிட சாலை போன்ற மஸ்தகத்தை உடையவை) அமைந்துள்ளன. தெற்கு காகர விமானம் (படம் நன்றி:  G.N. Subrahmanyam, CC0, via Wikimedia Commons) தெற்கு காகர விமானம் (படம் நன்றி:  G.N. Subrahmanyam, CC0, via Wikimedia Commons) மேற்கு மதில் காகர விமானம் வடக்கு மதில் காகர விமானம் வாயிலைச் சுற்றி சப்தகன்னியர் இடது பக்கம் கீழிருந்து மேலாக: 1. வாயிற்காவல் பெண் நான்கு கைகள், அவற்றில் சூலம், கபாலம், நாகம்.  2. பிராம்மி. சப்த கன்னியர் அனைவருக்கும் 4 கைகள், வலது முன் கை வரத ஹஸ்தம். இடது கை தொடை மீது. பின் கைகளில் ஆயுதங்கள். சுகாசனத்தில் அமர்ந்துள்ளனர். இருக்கையின் முன்னால் அவர்களது வாகனங்கள். இங்கு அன்னம். மூன்று தலைகள். வலது பின் கையில் தாமரை. இடது பின் கை தெளிவில்லை. 3. மகேஸ்வரி - ரிஷபம், பின் கைகளில் அக்க மாலை, சூலம். உத்தரத்தில் இடமிருந்து வலமாக: 4. கௌமாரி - மயில், ஆயுதங்கள் தெளிவில்லை, 5.வைஷ்ணவி - கருடன், சக்கரம், சங்கு. 6. துவார லலாட பிம்பத்தில் கஜலட்சுமி. வழக்கத...

முகலிங்கம் முகலிங்கேஸ்வரர் கோயில் 5: சிறு விமானங்கள்

Image
முகலிங்கம் மதுகேஸ்வர தேவுல ஒரு பஞ்சாயதன அமைப்பு கொண்ட கோயில். "பஞ்ச" என்றால் ஐந்து, "ஆயதனம்" என்றால்  சன்னதி. சிவன், திருமால், சூரியன், கணபதி, பார்வதி ஆகிய ஐந்து தெய்வங்களுக்கான ஐந்து விமானங்கள் கொண்ட கோயில் வளாகம் பஞ்சாயதன கோயில். மையத்தில் முதன்மை தெய்வத்திற்கான விமானமும் சுற்றி நான்கு மூலைகளில்  தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் மற்ற நான்கு தெய்வங்களுக்கான சிறு விமானங்களும் உள்ள அமைப்பு.  முகலிங்கம் மதுகேஸ்வர தேவுலத்தில் சிவன் மையமாக இருக்கிறார்.  தென்கிழக்கு விமானம் தென்கிழக்கு விமானம் - கிழக்குப் பார்வை 1அ. பாபாக என்னும் அதிட்டானம் மைய முண்டியின் கீழ் ஒடுங்கிய இரு உறுப்புகளையும் பக்க முண்டிகளின் கீழ் மூன்று அகன்ற உறுப்புகளையும் (குர, கும்ப, பட) கொண்டுள்ளது.  1ஆ. ஜாங்க என்னும் சுவர்ப் பகுதியில் மூன்று முண்டிகள் (கோட்டங்கள்) உள்ளன. மைய பெரிய முண்டி பார்ஸ்வதேதை என்னும் அந்த திசைக்குரிய முக்கிய தெய்வ வடிவத்திற்கும் பக்க சிறிய முண்டிகள் ஆவர்ண தேவதை என்னும் மற்ற தெய்வ வடிவங்களுக்கும் உரியவை. இவற்றின் மேற்பகுதி விமானங்கள் போல வடிவம...

முகலிங்கம் முகலிங்கேஸ்வரர் கோயில் 3 : ஜகமோஹனம் - 2: வடக்குப் பகுதி

Image
  வடமேற்கு மூலை விமான அமைப்பு ஜகமோஹனத்தின் வடமேற்கு மூலை விமானம் - வடக்குப் பக்கம் வடமேற்கு மூலை விமானம் - வடக்குப் பக்க வஜ்ர மஸ்தகம் மேற்கு முண்டி - சூரியன் (படம் நன்றி: G.N. Subrahmanyam, CC0, via Wikimedia Commons) நடு முண்டி - கார்த்திகேயன் காகபக்ஷ முடி அலங்காரம், வலது பக்கம் மயில் (படம் நன்றி: G.N. Subrahmanyam, CC0, via Wikimedia Commons) இணையர் (படம் நன்றி: G.N. Subrahmanyam, CC0, via Wikimedia Commons) ஜகமோஹனத்தின் வடக்குச் சுவர் சிற்பங்கள் ஜகமோஹனத்தின் மேற்கு ஜாங்க சிற்பங்கள் (PC: Bharat Kumar Perumalla via Google maps) மேல் பகுதி (படம் நன்றி: G.N. Subrahmanyam, CC0, via Wikimedia Commons) மேற்கில் இருந்து கிழக்காக: 1. கருடன். இருபக்க இறக்கைகள் இவரை அடையாளம் காட்டுகின்றன. இரு கைகள். வலது கையில் அக்கமாலை கொண்டு இடது கையை கையை ஒரு தடி மீது வைத்து ஸ்வஸ்திகாசனத்தில் நிற்கிறார். குந்தளக் கொண்டையாய் முடிந்த தலைமுடி. நாகாபரணங்கள் பல அணிந்திருக்கிறார். கழுத்தில் அணிந்த பாம்பின் தலை வலது புறம் நீண்டுள்ளது. இரு பாம்புகளை தோள்வளைகளாகவும் மற்றொரு பாம்பை உதர பந்தமாய...