கலிங்கக் கோயில் கட்டடக் கலை - பகுதி 1
நா கர ம், திராவிடம், வேசரம் ஆகிய மூன்று அடிப்படை பாணிகளைத் தவிர, கலிங்கப் பாணி கட்டடக்கலை தனித்துவமான பாணியா ாக உள்ளது. கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள அம்ருதேஸ்வர் சிவன் கோவிலின் முகமண்டபத்தில் உள்ள பொஆ 1231 ஆண்டு சேவுன மன்னன் சிங்கணனின் தூண் கல்வெட்டில், நாகர, வேசர மற்றும் திராவிட பாணிகளுடன் கலிங்கப் பாணி இருப்பதற்கான குறிப்பு உள்ளது. இந்தக் கட்டக் கலையின் தனித்துவமான அம்சங்களைக் கண்டு, இதை பெர்குசன் முதலிய அறிஞர்கள் கலிங்க பாணி என்று அழைத் தனர். 6-7 ஆம் நூ முதல் கலிங்கக் கோயில்கள் முறையாக கிடைத்தாலும், 2-3 நூ முதலே அந்த ஆ லயக்கலை இருந்ததற்கான சில சான்றுகள் உள்ளன. இவை ஏகமார புராணம், கபில சம்ஹிதை முதலிய நூல்கள், சில இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட சிறு கோயில்கள் ஆகியவற்றில் காணப்படுகின்றன.. கி.பி 6 - 7 ஆம் நூ இருந்து கி.பி 13 ஆம் நூ வரை கலிங்க பாணி பரிணாம வளர்ச்சி அடைந்தது. விஷ்ணு புராணம், கருட புராணம், அக்னி புராணம், பவிஷ்ய புராணம், பிருஹத் சம்ஹிதை, மத்ஸ்ய புராணம், சுக்ரநீதி போன்ற புராண நூல்களும், புவன பிரவேசம், புவன பிரதீபம் போன்ற கட்டிடக்கலை ந...