Posts

Showing posts from January, 2026

கலிங்கக் கோயில் கட்டடக் கலை - பகுதி 2

Image
 கலிங்கக் கோயில் கட்டடக் கலையின் பரிணாம வளர்ச்சியை  நான்கு தனித்துவமான கட்டங்களாகப் பிரிக்கலாம். 1. உருவாக்கக் காலம் (உரு) 2. இடைநிலைக் காலம் (இடை) 3. முதிர்ச்சி காலம் (முதிர்) 4. வீழ்ச்சி காலம் (வீழ்) இக்காலகட்ட அரச வம்சங்கள் 6-8 நூற்றாண்டு - சைலோத்பவர்கள் 736- 950 - பௌமாகரர்கள்  882 - 1112 - சோமவம்ஷி 1077 - 1434 - கங்கர்கள் 1431 - 1541 - கஜபதி  1. தொடக்க காலம் பொ.ஆ. 500 - 850 அரச வம்சம்:  சைலோத்பவர்கள், பௌமாகரர்கள் முன் பகுதி எடுத்துக்காட்டுகளாக விளங்கும் கோயில்கள் புவனேஸ்வரில் உள்ள லட்சுமணேஸ்வர், பரதேஸ்வர், சத்ருகணேஸ்வர், ஸ்வர்ணஜலேஸ்வர், பரசுராமேஸ்வர், மோகினி மற்றும் கபாலினி.  ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள முகலிங்கஸ்வரம் முகலிங்கேஸ்வரர் கோயில், நாராயணபுரம் 4 கோயில்கள், ஆகியவையும் இந்த காலகட்டத்தைச் சேர்ந்தவையே. அவை தென் கலிங்கப் பகுதியை அதே காலத்தில் ஆண்ட கீழை கங்கர்களால் கட்டப்பட்டவை இவற்றில், 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புவனேஸ்வரில் உள்ள பரசுராமேஸ்வர் கோயில் சிறந்த நிலைமையில் உள்ளது. தொடக்க கால கோயில்களின் இயல்புகளைக் காட்டுகிறது. சுமார் 650 AD இல் ...