கலிங்கக் கோயில் கட்டடக் கலை - பகுதி 2

 கலிங்கக் கோயில் கட்டடக் கலையின் பரிணாம வளர்ச்சியை  நான்கு தனித்துவமான கட்டங்களாகப் பிரிக்கலாம்.


1. உருவாக்கக் காலம் (உரு)
2. இடைநிலைக் காலம் (இடை)
3. முதிர்ச்சி காலம் (முதிர்)
4. வீழ்ச்சி காலம் (வீழ்)

இக்காலகட்ட அரச வம்சங்கள்

6-8 நூற்றாண்டு - சைலோத்பவர்கள்
736- 950 - பௌமாகரர்கள் 
882 - 1112 - சோமவம்ஷி
1077 - 1434 - கங்கர்கள்
1431 - 1541 - கஜபதி 

1. தொடக்க காலம்

பொ.ஆ. 500 - 850

அரச வம்சம்: சைலோத்பவர்கள், பௌமாகரர்கள் முன் பகுதி

எடுத்துக்காட்டுகளாக விளங்கும் கோயில்கள் புவனேஸ்வரில் உள்ள லட்சுமணேஸ்வர், பரதேஸ்வர், சத்ருகணேஸ்வர், ஸ்வர்ணஜலேஸ்வர், பரசுராமேஸ்வர், மோகினி மற்றும் கபாலினி. 

ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள முகலிங்கஸ்வரம் முகலிங்கேஸ்வரர் கோயில், நாராயணபுரம் 4 கோயில்கள், ஆகியவையும் இந்த காலகட்டத்தைச் சேர்ந்தவையே. அவை தென் கலிங்கப் பகுதியை அதே காலத்தில் ஆண்ட கீழை கங்கர்களால் கட்டப்பட்டவை

இவற்றில், 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புவனேஸ்வரில் உள்ள பரசுராமேஸ்வர் கோயில் சிறந்த நிலைமையில் உள்ளது. தொடக்க கால கோயில்களின் இயல்புகளைக் காட்டுகிறது. சுமார் 650 AD இல் சைலோத்பவ அரச வம்சத்தால் கட்டப்பட்டது.

பரசுராமேஸ்வரர் கோயில், புவனேஸ்வர்
1. தொடக்க கால ரேக தேவுலங்கள் குறைந்த அல்லது மிதமான உயரம் உடையவை. இது 12.8 மீ (42 அடி) உயரம்.
2. அவற்றில் பிஷ்டம் என்னும் மேடை இல்லை. அவை தரையில் இருந்து நேரடியாக எழுந்தன.
படம் நன்றி: G41rn8, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons



பரசுராமேஸ்வர் கோயில், புவனேஸ்வர்
3. தொடக்க கால ரேக தேவுலங்கள் திரிரத வகை. இங்கு பாடம் மூன்று ரதகங்களைக் கொண்டிருக்க (திரிரதம்), கண்டியில் கனிக ரதப் பகுதி நடுவில் உள்ள ஒரு ஆழமற்ற பிளவினால் இரண்டு பகங்களாகப் பிரிந்துள்ளது - கனிக பக, அனுரத பக. பிற்கால பஞ்ச ரத விமானங்களுக்கு முன்னோடி.
(படம் நன்றி: Kritzolina, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons)



பாடம்,பரசுராமேஸ்வரர் கோயில், புவனேஸ்வர்
(படம் நன்றி: Bernard Gagnon, CC BY-SA 3.0 <https://creativecommons.org/licenses/by-sa/3.0>, via Wikimedia Commons)
4. தொடக்க கால தேவுலங்கள் மூவங்க பாடம் கொண்டிருந்தன - பாபாகம், ஜாங்கம் மற்றும் பரண்டம். ஜாங்கம் மூன்றாகப் பிரிக்கப்படவில்லை.

5. பாபாகம் மூன்று உறுப்புகளை மட்டுமே கொண்டுள்ளது. 

6. தேவகோட்டங்களைத் தவிர ஜாங்கம் வெறுமையாக உள்ளது.

7. பரண்டம் உள்ளொடுங்கிய கண்டி (kanti, कन्टी) இல் முடிகிறது. இந்த வடிவம் பிற்காலத்தில் காணப்படவில்லை.  இதில் சிறு சிற்பங்கள் உள்ளன. 

8. ஜாங்கம் பாபாகத்தை விட இரு மடங்கு உயரமாக உள்ளது. 

9. ராஹா அதன் தேவகோட்டத்துடன் பாபாகத்தை முழுவதுமாக வெட்டி அமைகிறது. 

மேற்கண்டவை தொடக்க கால கலிங்க பாணி கோயில்களின் பண்புகள்.



பரசுராமேஸ்வரர் கோயில், புவனேஸ்வர்
பரண்டத்தின் கன்டியில் காதலர் சிற்பங்கள். இடையே தட்டி வேலை.
மூலையில் விடாலம் (vidala, विडाल). = வியாழம். கலிங்க மரபில் மிகப் பிரபலமான ஒரு வடிவம். மண்டியிட்டிருக்கும் ஒரு யானை அல்லது பூதம் மீது ஒரு சிங்கம் முன்னங்கால்களை உயர்த்தி நிற்பது.

பரசுராமேஸ்வரர் கோயில், புவனேஸ்வர்
பரண்டத்தின் கன்டியில் கொடிக் கருக்கு

பரசுராமேஸ்வரர் கோயில், புவனேஸ்வர்
கனிக பகவில் ஐந்து அம்லாக்கள் உள்ளன. ஒவ்வொரு பூமியிலும் நான்கு அடுக்குப் பலகைகள் உள்ளன. அவை பூமி வரண்டிகள். 
பூமி வரண்டிகளின் முன்புறம் கவக்ஷாக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கவக்ஷா புத்த கோயில்களான சைத்தியங்களின் வாயில் முகப்பில் காணப்படும் அலங்கார லாட வடிவ சாளரங்களின் வடிவம் கொண்டவை.
(படம் நன்றி: Zoetrope2012, CC BY-SA 3.0 <https://creativecommons.org/licenses/by-sa/3.0>, via Wikimedia Commons இல் இருந்து)

பரசுராமேஸ்வரர் கோயில், புவனேஸ்வர்
8. பிசமத்தின் மூலைகள் மீது பேகியின் முன் அமலகத்திற்கு கீழே அமர்ந்திருக்கும் ஈருடல் ஒரு தலை சிம்மம். இது 'தோபிசா சிம்ஹ' (dopichha simha, दोपिछा सिम्ह) எனப்படும். இது தொடக்க கால கோயிலகளில் காணப்படுவதில்லை. இங்குள்ளது பிற்காலத்தில் புனரமைப்பின்போது புதிதாக சேர்க்கப்பட்டது.
(படம் நன்றி: Balaji, CC BY-SA 3.0 <https://creativecommons.org/licenses/by-sa/3.0>, via Wikimedia Commons இல் இருந்து)

தொடக்கக் காலக் கோயிலான புவனேஸ்வர் தாளேஸ்வர் (taleswar) கோயில்
9. கருவறை வாயில் மேல் உள்ள லலாடத்தில் நவகிரக வரிசை. தொடக்கக் காலக் கோயில்களில் எட்டு கிரகங்கள் மட்டுமே இருந்தன. கேது இல்லை. 
(படம் நன்றி: The Great Kalinga, instagram)

ரேக தேவுலத்தின் முன் ஜகமோஹனம் பரசுராமேஸ்வரர் கோயில், புவனேஸ்வர்
(படம் நன்றி: 
Balaji, CC BY-SA 3.0 <https://creativecommons.org/licenses/by-sa/3.0>, via Wikimedia Commons

10. தொடக்கக் காலக் கோயிகளில் ரேக தேவுலம் மட்டுமே இருந்தது. ஜகமோஹனம் இல்லை. இங்குள்ள ஜகமோஹனம் பின்னர் இணைக்கப்பட்டது.
11. இந்த தொடக்க கால ஜகமோஹனத்தின் கூரை பிடா வின் பிரமிட் வடிவமாக இல்லாமல் இரு நிலை சாய்வான தட்டைக் கூரையாக உள்ளது.
12. ஜகமோஹனத்தை அதன் உள்ளேஅமைந்த இரு வரிசைகளில் வரிசைக்கு மூன்றாக அமைந்த ஆறு செவ்வக வடிவத் தூண்கள் தாங்குகின்றன. பிற்கால ஜகமோஹனங்களில் தூண்கள் இல்லை.
வடமேற்கில் சஹஸ்ர லிங்கம். 1000 சிறு லிங்கங்களை மேற் பரப்பில் கொண்டது.

ஜகமோஹனத்திற்கு மேற்கே வாயிலும் அதன் இருபுறமும் இரு  சிற்பச் சாளரங்களும் உள்ளன. தெற்கில் ஒரு வாயிலும் தெற்கிலும் வடக்கிலும் ஒரு  சாளரமும் உள்ளன. இந்த வாயில்கள் சாளரங்கள் கூரைத் திறப்புகள் வழியாக ஒளியும் காற்றோட்டமும் கிடைக்கின்றன.

ஜகமோஹனத்தில் மேற்கே வாயிலுக்கு அடுத்து உள்ள சிற்பச் சாளரம்



வை தவிர தொடக்கக் கால பண்புகளாக 

13. கண்டியில் அங்கசிகரங்கள் இல்லை. 
14. ஜாங்கத்தின் மூலைகளில் திக்பாலர்கள் இல்லை.


சிற்பங்கள்

ஜகமோஹனத்தின் வடக்குச் சுவர்

ஜகமோஹனத்தின் வடக்குச் சுவர். 
பாபாகத்தின் மேல் ஜகமோஹனத்தின் கீழ்ப்பகுதி சுவர்த் தூண்களால் சிறு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் தெய்வ உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 
(படம் நன்றி: 
Balaji, CC BY-SA 3.0 <https://creativecommons.org/licenses/by-sa/3.0>, via Wikimedia Commons

நடுவில் உள்ள சாளரத்தின் மேற்கே (லிங்கத்தின் அருகில்0 9 கோட்டங்களில் சப்த மாதர் தொகுதி. சாளரத்திற்கு கிழக்கே ஆறு கோட்டங்கள் அவற்றில் சாளரத்தி இருந்து சிவன், லகுலீசர், ?. துர்க்கை, சந்திரன், சூரியன்.

சப்த கன்னியர் சிற்பங்கள்

பரசுராமேஸ்வரர் கோயில், புவனேஸ்வர்
வடக்குச் சுவரில் சப்த மாதர்கள். முன்னால் வீரபத்திரர், பின்னால் பிள்ளையார். 
12. தொடக்க காலத்திற்கு உரிய பண்பாக அன்னைகளின் மடியில் குழந்தைகள் இல்லை. 



அர்த்த பத்மாசன அமர்வில் அமர்ந்துள்ளனர்.  தொடக்க கால உருவ அமைதியை ஒட்டி பெருத்த உடல் கொண்டுள்ளனர். அமைதியான முக பாவம், காதுகளில் பெரிய பனையோலைக் குண்டலங்கள். தனித்துவமான முடி அலங்காரங்கள். சிலருக்கு நான்கு கைகள், சிலருக்கு இரண்டு. கைகளில் அவரவர் தனித்துவமான ஆயுதங்கள். கீழே அவரவர் வாகனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தொடக்கக் கால மரபை ஒட்டி மடியில் குழந்தைகள் இல்லை.
பிரம்மாணி / பிராம்மி -  4 முகங்கள், முன் தலையும் உடலும் சிதைந்திருக்கின்றன.  4 கைகள் பின் கைகளில் அக்க மாலை, ?, முன் கைகளில் ?, நீர்க்குடம். கீழே வாகனமான அன்னம்.
(இந்த மற்றும் அடுத்துள்ள இரண்டு படங்கள் நன்றி: Kritzolina, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons)

மகேஸ்வரி
ஜடா முடி, பின் கைகளில் அக்க மாலை, பழம்; முன் கைகளில் ?, சூலம்.
கீழே வாகனப் பொறிப்பு அழிந்துள்ளது.
இந்த சப்த மாதர் சிற்பங்கள்

மகேஸ்வரி
இரு பக்க ஜடை, இரு கைகள், இடது கையில் வேல் எனும் சக்தி ஆயுதம். பின் கைகளில் அக்க மாலை, பழம்; முன் கைகளில் ?, சூலம்.
கீழே வாகனப் பொறிப்பு அழிந்துள்ளது.

வைஷ்ணவி
4 கைகள். வலது பின் கையில் பிரயோகச் சக்கரம், இடது முன் கையில் சங்கு, இடது பின் கை அழிந்துள்ளது. கீழே வாகனம் அழிந்துள்ளது.
(இந்த மற்றும் கீழுள்ள 4 படங்கள் நன்றி: G41rn8, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons)

இந்திராணி, வராகி
இந்திராணிக்கு இரு கைகள் இடக்கையில் வஜ்ரம். கீழே வாகனம் யானை ஐராவதம்.
வராகிக்கு நான்கு கைகள் பின் கைகளில் , பரசு; முன் கைகளில் மீன், ? கபாலம். கீழே வாகனம் மனிதன்.

சாமுண்டி, பிள்ளையார்
சாமுண்டி - வற்றிய உடல், பின் கைகளில் பரசு, சூலம் முன் கைகளில் ?, கபாலம். கீழே வாகனம் ஆந்தை
பிள்ளையார் - லலிதாசனம், மனித முகத்துடன் தாடையில் தொடங்கும் துதிக்கை, பின் கைகளில் அக்க மாலை, பரசு; முன்கைகளில் முள்ளங்கி,  மோதகம்.



? பிராம்மி
கைகளில் அக்கமாலை, கத்தி, மலர், நீர்க்குடம்

சூரியன், ?பிரம்மா?சந்திரன்


லகுலீசர் - ஜகமோஹனம் வடக்கு ஜாங்கம்
லகுடம் என்னும் தடியுடன்.அர்த்த பத்மாசனம். கைகளில் தர்ம சக்கர பிரவர்த்தன முத்திரை
(https://blogvirasatehind.wordpress.com/2017/05/30/pashupata-cult-and-the-ancient-temples-of-bhubaneshwar/)

லகுகீசர் தம் நான்கு சீடர்களுடன் - கௌருசியர், கர்க்கர், மித்திரர், குசிகர். இங்கு அவர் தாமரை மீது அமர்ந்திருக்க சீடர்கள் தாமரை இலைகள் மீது.
கண்டியின் கிழக்கு ராஹா
(G41rn8, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons)

சுமார் பொஆ 200 இல் பிறந்த லகுலீசர் பாசுபத சைவப் பிரிவின் நிறுவனர் அல்லது அதன் மிக் முக்கிய குரு. அவர் சிவனின் அவதாரமாகக் கருதப்பட்டார். கலிங்கத்தில் 7 ஆம் நூற்றாண்டில் தழைத்திருந்த பௌத்தத்தின் தாக்கத்தின் காரணமாக லகுலீசர் புத்தர் போன்ற தலைமுடி, காதுகள், தர்மசக்ர பிரவர்த்தன முத்திரை ஆகியவை கொண்டுள்ளார். 



தெற்கு தேவகோட்டத்தில் கார்த்திகேயன்.
இரு கைகள், இடது கையில் வேல் எனும் சக்தி ஆயுதம், கீழே மயில்
தேவகோட்டம் பாபாகத்தை வெட்டி உள்ளது.
(படம் நன்றி: G41rn8, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons)

மரபாக சிவன் கோயில்களில் ராஹா தேவ கோட்டங்களில் கிழக்கு/ மேற்கில் பிள்ளையார், தெற்கில் கார்த்திகேயன், வடக்கில் பார்வதி அமைவர். இந்தக் கோயிலில் வடக்கு தேவகோட்டம் வெறுமையாக உள்ளது. 


உமை மகேசுவரர்.
மகராஜ லீலாசனத்தில் சிவன் , வலப் பின் கையில் சூலம், இடப் பின் கை உமையின் இடது தோளை அணைத்திருக்கிறது. இடது முன் கை தொடை மீதிருக்க, வல முன் கையில் நாகம். இருவருக்கும் இரு பக்க காதணிகள் வேறுபடுகின்றன. சிவனின் வலக் காது வளையத்தில் இருந்து ஒரு பாம்பு எட்டிப் பார்க்கிறது. லலிதாசனத்தில் அமர்ந்திருக்கும் உமைவலது கையை சிவன் இடது தோளின் மீது போட்டுள்ளார். கீழே ரிஷபம், சிங்கம், நடுவில் பிள்ளையார்.
சிவன் விரைத்து மேல் நோக்கிய குறியுடன் (ஊர்த்துவ லிங்கம்,Urdhva linga) இருக்கிறார். 
(Kritzolina, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons)

G41rn8, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons)


 அன்னபூரணி உணவிட பிச்சாடனர் சாபம் நீங்குதல்
பிச்சாடனரின் 'ஊர்த்துவ லிங்கம்' .





https://blogvirasatehind.wordpress.com/2017/05/30/pashupata-cult-and-the-ancient-temples-of-bhubaneshwar/ - இந்தத் தளத்தில் ஒடிசாவில் பாசுபதம் பற்றிய அறிமுகம், சிற்பங்கள் பற்றிய தகவல்களைக் காணலாம். 


It can be safely assumed that the architectural progression would have started from very rudimentary structures, and moving towards fully developed shrines. V A Smith2  writes, “All authors who treat Indian architecture notice, and are embarrassed by the fact, that each style when it first comes to our knowledge is full-grown and complete. The earliest specimen betray no signs of tentative effort, and in no case is it possible to trace the progressive evolution of a given style from rude beginnings.”

https://puratattva.in/parasuramesvara-temple-a-gem-of-odishan-architecture/

Comments

Popular posts from this blog

முகலிங்கம் முகலிங்கேஸ்வரர் கோயில் 1 - இடம், மதில்கள், நுழைவாயில்கள்

முகலிங்கம் முகலிங்கேஸ்வரர் கோயில் 3 : ஜகமோஹனம் - 2: வடக்குப் பகுதி

முகலிங்கம் முகலிங்கேஸ்வரர் கோயில் 2 - ஜகமோஹனம் - 1 கிழக்கு, தெற்குப் பகுதிகள்