முகலிங்கம் முகலிங்கேஸ்வரர் கோயில் 1 - இடம், மதில்கள், நுழைவாயில்கள்

அமைவிடம்

முகலிங்கம் ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வம்சதாரா நதியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள ஒரு கிராமம். ஸ்ரீகாகுளம் நகரத்திலிருந்து (அருகில் உள்ள ரயில் நிலையம்) 48 கி.மீ, விசாகப்பட்டினத்திலிருந்து (அருகில் உள்ள விமான நிலையம்) 160 கி.மீ, ஒடிஷாவின் பர்லகமுண்டியில் இருந்து33 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

வரலாறு

வரலாற்று ரீதியாக முகலிங்கம் 6 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை கிழக்கு கங்க வம்சத்தின் தலைநகராக விளங்கியது. அப்போதைய பெயர் கலிங்கநகரி. 1122 ஆம் ஆண்டில் மன்னர் அனந்தவர்மன் சோடகங்க தேவர் உத்கலாவை கைப்பற்றி, தலைநகரை கலிங்கநகரியிலிருந்து கடகாவிற்கு (நவீன கட்டாக்) மாற்றினார். 1936 க்கு முன்பு இது மதராஸ் ராஜதானியில் பிரிக்கப்படாத கஞ்சம் மாவட்டத்தின் கீழ் இருந்தது. 

கோயில்கள்

முகலிங்கத்தில் மூன்று கீழை கங்கர் கால சிவன் கோயில்கள் உள்ளன- முகலிங்கேஸ்வரர் என்னும் மதுகேஸ்வரர், சோமேஸ்வரர் மற்றும் பீமேஸ்வரர் 


முகலிங்கேஸ்வரர் கோயில்

முகலிங்கேஸ்வரர் கோயில், முகலிங்கம்
கல்வெட்டுகளில் மதுகரேஸ்வரர் என்று பெயர். தொடக்க காலக் கலிங்க பாணிக் கலை வடிவம்
1 -வெளி மதில். 2 - வெளி கோபுரம். 3. நந்தி மண்டபம்
4  -உள் மதில்  5 - உள் கோபுரம்.
6 - மைய ரேக தேவுலம் + 7 - நான்கு மூலை தேவுலங்கள் உடைய பஞ்சாயதன அமைப்பு. மைய தேவுலம் சிவனுக்கானது. மூலை நான்கு சூரியன், திருமால், சக்தி, முருகனுக்கு ஆனவை.
8 -ஜகமோஹனம்   9 - ஜகமோஹனத்தின் நான்கு மூலைகளில் விமான அமைப்புகள்
10 - தெற்கு, வடக்கு, மேற்கில் மதிலில் சிறு சன்னிதிகள்
பின்னால் வம்சதாரா நதி
காலம்: கட்டட, சிற்பக்கலை அமைதிகளைக் கொண்டு இது கலிங்க ஆலயக்கலையின் தொடக்க காலத்தைச் சேர்ந்தது - 8ஆம் நூ பிற்பகுதி (ASI).
(படம் நன்றி: ASI Instagram பக்கம்)

வெளி மதில். மூன்று உறுப்பு அதிஷ்டானம்
இந்தக் கோயில் இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வெளி மதிலில் சாத்தி வைக்கப்பட்டுள்ள அரிகண்டச் சிற்பம்

வெளி மதிலில் சாத்தி வைக்கப்பட்டுள்ள உடைந்த சிற்பங்கள்

வெளி வாயில் - பக்கத் தோற்றம்

வெளி வாயில் - முன்புறத் தோற்றம்
(படம் நன்றி: ASI Instagram பக்கம்)

வெளிவாயில் தெற்குப் பக்கத்தில்  வஜ்ர மஸ்தகம் என்னும் மகா நாசி

வெளி வாயில் படிக்கட்டின் இரு பக்க சிங்கங்களுள் ஒன்று.


வெளி வாயில் சிற்பம்

வெளி வாயிலின் உட்புறத் தோற்றம்

வெளி உள் வாயில்களுக்கு இடையில் நந்தி மண்டபம்

உள் வாயில்

நான்கு மடிப்புகளாக அமைந்த உள் வாயிலின் உள் மடிப்பு
மேலே சூரியன், கீழே இருபுறமும் வாயிற்காவலர் பெண்கள், அவர்களுக்கு மேல் தொழும் பக்தர்கள்.

தெற்கு காவல் பெண்டு. நான்கு கைகள். பின் கைகளில் சாமரம், மலர்க் கொத்து. இடது முன் கையில் நீர்க் குடுவை, வலது கை தடி மீது உள்ளது. இது போன்ற நான்கு கை காவல் பெண்டுகளை இந்தக் கோயிலின் பல வாயில்களிலும் காணலாம். ஒவ்வொருவரும் வேறுபட்ட கொண்டையுடன்.

இரு கை காவற்பெண்டு. வலது கையில் சாமரம், இடது கை கடி ஹஸ்தமாய் இடுப்பில். வலது காலருகில் ஒரு சிறுவன்.

இரு பக்கமும் தொழும் அடியவர்கள்

உள் வாயிலின் 2 வது மடிப்பு - கொடி அலங்காரம்

3, 4 ஆம் மடிப்புகள்
3 ஆம் மடிப்பில் கொடி வளைவுகளின் பக்கத்தில் இணையர்
4 ஆம் மடிப்பில் மேலும் கீழும் கடபல்லவம். இடையில் இணையர்கள், சிம்மத் தலை, முதலியன

4 அடுக்கு உத்திரங்கள்



உள் வாயிலின் உட்புறத் தோற்றம்

உள் வாயிலின் உட்புறம் வாயிலின் மேல் உள்ள துவாய லலாட பிம்பத்தில் அமர்ந்த சிங்கத்தின் மீது சுகாசனத்தில் பத்து கை கொற்றவை.

உள் வாயிலின் உட்புறம் வாயிலின் மேல் ஒரு காட்சி

உள் வாயிலின் உட்புற வாயிலின் இரு பக்கங்கள். 
வலது பக்கம் கொடிகளைப் பிடித்தவாறு நிற்கும் சுரசுந்தரிகள், சாமரம் தாங்கி நிற்கும் பெண்கள். இடது பக்கம் இணையர்கள் சிற்பங்கள்


மற்ற பாகங்கள்







Comments

Popular posts from this blog

முகலிங்கம் முகலிங்கேஸ்வரர் கோயில் 3 : ஜகமோஹனம் - 2: வடக்குப் பகுதி

முகலிங்கம் முகலிங்கேஸ்வரர் கோயில் 2 - ஜகமோஹனம் - 1 கிழக்கு, தெற்குப் பகுதிகள்