வடமேற்கு மூலை விமான அமைப்பு
 |
| ஜகமோஹனத்தின் வடமேற்கு மூலை விமானம் - வடக்குப் பக்கம் |
 |
| வடமேற்கு மூலை விமானம் - வடக்குப் பக்க வஜ்ர மஸ்தகம் |
 |
மேற்கு முண்டி - சூரியன்
| (படம் நன்றி: G.N. Subrahmanyam, CC0, via Wikimedia Commons) |
|
 |
நடு முண்டி - கார்த்திகேயன் காகபக்ஷ முடி அலங்காரம், வலது பக்கம் மயில்
| (படம் நன்றி: G.N. Subrahmanyam, CC0, via Wikimedia Commons) |
|
 |
இணையர்
| (படம் நன்றி: G.N. Subrahmanyam, CC0, via Wikimedia Commons) |
|
ஜகமோஹனத்தின் வடக்குச் சுவர் சிற்பங்கள்
 |
ஜகமோஹனத்தின் மேற்கு ஜாங்க சிற்பங்கள் (PC: Bharat Kumar Perumalla via Google maps) |
 |
மேல் பகுதி (படம் நன்றி: G.N. Subrahmanyam, CC0, via Wikimedia Commons) |
மேற்கில் இருந்து கிழக்காக:
 |
| 1. கருடன். இருபக்க இறக்கைகள் இவரை அடையாளம் காட்டுகின்றன. இரு கைகள். வலது கையில் அக்கமாலை கொண்டு இடது கையை கையை ஒரு தடி மீது வைத்து ஸ்வஸ்திகாசனத்தில் நிற்கிறார். குந்தளக் கொண்டையாய் முடிந்த தலைமுடி. நாகாபரணங்கள் பல அணிந்திருக்கிறார். கழுத்தில் அணிந்த பாம்பின் தலை வலது புறம் நீண்டுள்ளது. இரு பாம்புகளை தோள்வளைகளாகவும் மற்றொரு பாம்பை உதர பந்தமாயும் அணிந்திருக்கிறார். கணுக்கால் வரையான பட்டாடை. |
 |
| 2. தலைக்குப் பின்னால் இருக்கும் பிறை நிலவு இவர் சந்திரனாய் இருக்கலாம் என்று குறிப்பு தருகிறது. முகம் மழுங்கியுள்ளது. தலையின் இரு பக்கங்களிலும் தொங்கும் சடை நுனிகள். இரு கைகளுள் வலதில் அக்கமாலை, இடதில் நீர்க் குடுவை. மரவுரி ஆடை. கழுத்தில் சிறு மணி மாலை, பூணூல், உதர பந்தம், அரைப்பட்டிகை, தோள் வளைகள், கைவளைகள். வலது கால் அருகில் ஒரு ஆண், இடது கால் அருகில் ஒரு பெண்.
|
 |
3. ஜாலகம் (சாளரம்) (படம் நன்றி: G.N. Subrahmanyam, CC0, via Wikimedia Commons) |
 |
| 4. இந்திரன். வலது கையில் பிடித்திருக்கும் வைர ஆயுதமும் பின்னாலிருந்து வலது கால் பக்கத்தில் எட்டிப் பார்க்கும் யானையும் இவரை அடையாளம் காட்டுகின்றன. இவர் பெற்ற சாபத்தை குறிக்கும் வகையில் இரு தோள்கள் மீதும் கண்கள். சதுரமான பெட்டி போன்ற மகுடம். அதன் கீழ் முகத்தின் பக்கத்திலிருந்து வெளி நீண்டிருக்கும் ஜடை நுனிகள். சந்திரனைப் போன்ற அணிகலன்கள். உதர பந்தம் இல்லை. இடது கை தொடைகளைச் சுற்றி கீழே தொங்கும் ஆடையைப் பற்றியுள்ளது. |
 |
5. இவரது முடி அலங்காரத்தைக் கொண்டு இவர் கார்த்திகேயராக இருக்கலாம். தோள்பட்டை நீளமுள்ள முடி மூன்றாகப் பிரிக்கப்பட்டு, மையப் பகுதி கொண்டையாக முடியப்பட்டு, இரு பக்கவாட்டு பாகங்கள் இரு புறமும் தொங்கிக் காணப்படுகின்றன. "காகபக்ஷம்" (काकपक्ष - காகத்தின் இறக்கைகள்) என்று அழைக்கப்படும் இந்த முடி அலங்காரத்தை பண்டைய காலத்தில் சிறுவர்கள் உபநயனத்திற்குப் பிறகு கல்வி கற்கும் பருவத்தில் கொண்டிருந்தனர். இராமாயணத்தில் முனிவர் விசுவாமித்திரர் இராம லட்சுமணர்களை அழைத்துச் செல்ல வந்தபோது அவர்கள் இந்த முடி அலங்காரத்துடன் இருந்தனர். இது சிறுவனான கார்த்திகேயனின் முடி அலங்காரம். இரு கைகள், வலது கையில் பழம் ஒன்றை வைத்திருக்கிறார். இடது கையில் தொடையைச் சுற்றிய அரைக்கச்சையைப் பிடித்திருக்கிறார். இரு பக்கமும் இருவர் அவர் முகத்தைப் பார்த்தவாறு நிற்கின்றனர். மேலே இரு பக்கமும் இரு வானவர்கள் மணிமாலையுடன் பறந்த நிலையில் உள்ளனர். |
 |
| 6. ஜாலகம் (சாளரம்) |
 |
7. ஹரிஹரர். சிவனுக்குரிய வலது பக்கமும் திருமாலுக்குரிய இடது பக்கமும் கொண்ட உருவம். வலது பின் கையில் சிவனுக்குரிய நாகம். வலது முன் கை வரத ஹஸ்தமாய் உள்ளது. இடது பின் கையில் திருமாலுக்குரிய கதை. கடி ஹஸ்தமாய் இடுப்பில் வைத்துள்ள இடது முன் கையில் சங்கு. தலை மீது வலது புறம் ஜடாமகுடம் இடதுபுறம் கிரீட மகுடம். முகத்தின் வலது புறம் நீண்ட மயிர் கற்றைகள் இடது புறம் சுருண்ட மயிர் கற்றைகள். வலது கால் அருகில் திரிசூலம் தலையில் சூடிய திருசூலநாதர். அவர் வலது கையில் அக்கமாலை இடது கையில் நீர்க் குடுவை. அவர் இடது கால் அருகில் ஒரு பாம்பு. ஹரிஹரரின் இடது கால் அருகில் ஆழியை தலையில் சூடிய சுதர்சனர். அவர் இடது கையில் ஒரு பழம், வலது கை அரைக்கச்சையைப் பிடித்திருக்கிறது. சிவனுக்குரிய மூன்றாவது கண்ணும் நிமிர் குறியும் உள்ளன. |
 |
8. ஏகபாதர் ஜடாபந்தம். அதன் முன் பக்கம் பிறைச் சந்திரன். உக்கிரமான முகம். இரு கைகள். வலது பின் கையில் சூலம், முன் கையில் அக்கமாலை. இடது பின் கையில் மான், மடங்கிய முன் கையில் நீர்க்குடுவை. நெற்றிக் கண், நிமிர் குறி. ஒற்றைக்கால். அதன் பக்கத்தில் இருபுறமும் இருவர் மண்டியிட்டு வணங்குகின்றனர். (துணை 1) |
 |
9. யார் என அடையாளம் காண இயலவில்லை. ஒருவகையான கரண்ட மகுடம். நான்கு கைகள். வலது பின் கையில் அக்கமாலை, முன் கை வரத ஹஸ்தமாய் நீண்டுள்ளது. இடது பின் கையில் நாகம், முன் கையில் நீர் குடுவை. வேட்டி போன்று கணுக்கால் வரை நீண்ட பருத்தி ஆடை. கால்களுக்கு இருபுறமும் இரு பெண்கள் தட்டுகளை ஏந்தி நின்றுள்ளனர். அவர்களது இரு தோள்களிலும் இருந்து தொங்கும் உத்தரீயம் குறிப்பிடத்தக்கது. |
வடகிழக்கு மூலை விமான அமைப்பின் ஜங்கா (சுவர்) சிற்பங்கள்
 |
வடக்கு பக்கம், மேற்கு முண்டி (கோட்டம்) (G.N. Subrahmanyam, CC0, via Wikimedia Commons) |
 |
வடக்குப் பக்கம் நடு முண்டி - நாகராஜன் தலைக்குப் பின்னால் ஏழு தலைப் பாம்பின் படம். சுருள் முடி. இரு கைகள். வலது கையில் அக்கமாலை, இடது கையில் உடைந்த நீர் குடுவை. கணுக்கால்வரை நீண்ட வேட்டி போன்ற பருத்தி ஆடை. கால்களின் வலது பக்கம் இடது கையால் அரைக்கச்சையைப் பிடித்தபடி நிற்கும் ஒருவர். அவர் வலது கையில் உள்ளது தெளிவில்லை இடது பக்கம் கால்களை மடக்கி குனிந்து வணங்கி நிற்கும் ஒருவர். |
 |
| வடக்குப் பக்கம் கிழக்கு முண்டி
வலது கைகளில் சூலம், அக்கமாலை; இடது கைகளில் நீர்க்குடுவை. மற்ற கை அரைக்கச்சையைப் பிடித்திருக்கிறது. ஜடாபந்தம். நெற்றிக்கண் நிமிர் குறி இல்லை. என்றாலும் சிவனாய் இருக்கலாம். |
 |
கிழக்குச் சுவர் வடக்கு முண்டி (வடக்கு கர்ண பத்தி)
|
 |
கிழக்குச் சுவர் நடு முண்டி- எண்கை மகிடற்செற்றாள் நுட்பமாகக் காட்டப்பட்டுள்ள தலைமுடி, வெறித்த கண்கள் கைகளில் தலைக்கு மேல் ஒங்கிய வாள், கேடயம்; வைரம், வில்; முன் இடது கையால் மகிடனின் எருமைத் தலையின் கொம்பு ஒன்றை பற்றி, முன் வலது கை சூலத்தால் மனித உடலுடன் வீழ்ந்து கிடக்கும் அவன் முதுகில் குத்துகிறாள். மற்ற இடது கையில் மணி. மற்ற வலது கையில் உள்ளது தெளிவில்லை. அவள் வலதுகால் அவன் முதுகை மிதிக்க, அவன் தொடையை சிங்கம் தாக்குகிறது. அவன் இரு கைகளால் வாளைப் பற்றியுள்ளான். |
 |
கிழக்குச் சுவர் தெற்கு முண்டி சிவன் - பின் இடது கையில் மழு, பின் வலது கையில் சூலம், முன் வலது கையில் அக்க மாலை, முன் இடது கையில் ஆடை. |
 |
கிழக்குப் பக்க வஜ்ரமஸ்தகம் சதாசிவர் - நடுவில் கிழக்கு நோக்கிய தத்புருஷ முகம், இடது புறம் தெற்கு நோக்கிய அகோர முகம், வலது புறம் வடக்கு நோக்கிய வாமதேவ முகம். |
துணை:
1. Ekapada Siva images in Orissan Art; Thomas Donaldson; Ars Orientalis
Vol. 13 (1982), pp. 153-167
Comments
Post a Comment