முகலிங்கம் முகலிங்கேஸ்வரர் கோயில் 4: மைய விமானம்

 

விமானம் - கலிங்க நாகர ரேக வகை விமானம்.
பாட, கண்டி, மஸ்தகம் என்னும் மூன்று அங்கங்கள். பாட வில் பாபாக என்னும் அதிட்டானப் பகுதி, ஜாங்க எனும் சுவர்ப் பகுதி, பரண்ட என்னும் கூரைப் பகுதி ஆகியவை அடங்கும்.  மஸ்தகத்தில் பெகி என்னும் கிரீவம், ஆமலகம், கலசம் முதலியவை உள்ளன.
ஜாங்க எந்த அலங்காரங்களும் கோட்டங்களும் இல்லாமல் வெற்றுச் சுவராக உள்ளது. பெயரளவுக்கும் மூன்று ரதங்களாகப் (பத்தி) பிரிக்கப்பட்டுள்ளது.
கண்டியும்  திரிரதமாக உள்ளது. அதன் நடு ராஹா பக மட்டும் ரேக நாகர அமைப்பும் அலங்காரமும் பெற்றுள்ளது. இரு பக்க கனிக பக பிடாக்கள் போன்ற கட்டுமானமாக உள்ளன. பூமி பிரிப்பு, பூமி அம்லா ஆகியவை காணப்படவில்லை. சிகத்தின் மேல் நான்கு மூலைகளிலும் நான்கு சிங்கங்கள் அமர்ந்துள்ளன. இரட்டை ஆமலகங்கள். 

பாபாக (அதிஷ்டானம்) - கீழிருந்து மேலாக குர, கும்ப, பட ஆகிய மூன்று கலிங்க நாகர உறுப்புகளைப் பெற்றுள்ளது. வித்தியாசமாக மேல் இரண்டு உறுப்புகளுக்கு இடையே திராவிட உறுப்பான கம்புகளோடு கூடிய கண்டம் உள்ளது தனித்துவமானது. அதிட்டானமும் ஜாங்கவின் திரிரத அமைப்பை பிரதிபலிக்கிறது. மேலே உள்ள கபோதம் போன்ற அமைப்பில் கீழ் ஒரத்தில் ரத்தின பட்டை அலங்காரமும் அதன் மேல் கவக்ஷா ( நாசி) க்களும் உள்ளன.

கண்டியின் தெற்குப் பக்கத்தில் உள்ள வஜ்ர மஸ்தகத்தில் (மகா நாசி) கீழே கணேசர் மேலே லகுலீசர் அவரது நான்கு சீடர்களுடன்.

கண்டியின் மேற்குப் பக்கத்தில் உள்ள வஜ்ர மஸ்தகத்தில் மயில் மீது கார்த்திகேயர்

கண்டியின் வடக்குப் பக்கத்தில் உள்ள வஜ்ர மஸ்தகத்தில் மகிடற்செற்றாள். தெற்கில் பிள்ளையார், மேற்கில் கார்த்திகேயர், வடக்கில் மகிடற்செற்றாள் ஆகிய மூவரும் அத்திசைகளுக்கு உரிய 'பார்சுவதேவதைகள்' ஆவர். ஜாங்காவின் மைய முண்டியில் (தேவகோட்டம்) இருக்க வேண்டியவர்கள். இந்த விமானத்தில் ஜாங்காவில் முண்டி எதுவும் இல்லை. ஆனால் தமக்குரிய திசைகளில்  வஜ்ர மஸ்தகத்தில் உள்ளனர்.

பிரநாளம் - நாகராஜன் கையில் குடம் போல
(இது கோயிலின் கூரையில் இருந்து எடுக்கப்பட்டு இங்கே பொருத்தப்பட்டதாக Douglas Barrett கூறுகிறார் - Mukhalingam temples by Douglas Barrett page 10). இது போன்ற பிரநாளங்கள் கூரையில் இப்போதும் உள்ளன.


துணை:

Douglas Barrett; Mukhalingam temples; 1960
Mary F Linda; Narayanapuram A 10th century site in Kalinga; Artibus Asiae; Vol. 50, No. 3/4 (1990), pp. 232-262


Comments

Popular posts from this blog

முகலிங்கம் முகலிங்கேஸ்வரர் கோயில் 1 - இடம், மதில்கள், நுழைவாயில்கள்

முகலிங்கம் முகலிங்கேஸ்வரர் கோயில் 3 : ஜகமோஹனம் - 2: வடக்குப் பகுதி

முகலிங்கம் முகலிங்கேஸ்வரர் கோயில் 2 - ஜகமோஹனம் - 1 கிழக்கு, தெற்குப் பகுதிகள்