கலிங்கக் கோயில் கட்டடக் கலை - பகுதி 1
நாகரம், திராவிடம், வேசரம் ஆகிய மூன்று அடிப்படை பாணிகளைத் தவிர, கலிங்கப் பாணி கட்டடக்கலை தனித்துவமான பாணியாாக உள்ளது. கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள அம்ருதேஸ்வர் சிவன் கோவிலின் முகமண்டபத்தில் உள்ள பொஆ 1231 ஆண்டு சேவுன மன்னன் சிங்கணனின் தூண் கல்வெட்டில், நாகர, வேசர மற்றும் திராவிட பாணிகளுடன் கலிங்கப் பாணி இருப்பதற்கான குறிப்பு உள்ளது. இந்தக் கட்டக் கலையின் தனித்துவமான அம்சங்களைக் கண்டு, இதை பெர்குசன் முதலிய அறிஞர்கள் கலிங்க பாணி என்று அழைத்தனர்.
6-7 ஆம் நூ முதல் கலிங்கக் கோயில்கள் முறையாக கிடைத்தாலும், 2-3 நூ முதலே அந்த ஆலயக்கலை இருந்ததற்கான சில சான்றுகள் உள்ளன. இவை ஏகமார புராணம், கபில சம்ஹிதை முதலிய நூல்கள், சில இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட சிறு கோயில்கள் ஆகியவற்றில் காணப்படுகின்றன.. கி.பி 6 - 7 ஆம் நூ இருந்து கி.பி 13 ஆம் நூ வரை கலிங்க பாணி பரிணாம வளர்ச்சி அடைந்தது.
விஷ்ணு புராணம், கருட புராணம், அக்னி புராணம், பவிஷ்ய புராணம், பிருஹத் சம்ஹிதை, மத்ஸ்ய புராணம், சுக்ரநீதி போன்ற புராண நூல்களும், புவன பிரவேசம், புவன பிரதீபம் போன்ற கட்டிடக்கலை நூல்களும் கலிங்கக் கோயில்களின் பெயரிடல், அவற்றின் பாகங்கள், திசை நோக்கு, வடிவியல் விவரங்கள், சிற்ப வரையறைகள், அலங்கார வகைகள் மற்றும் அவை அமையும் இடங்கள் போன்றவற்றைப் பற்றிய விவரங்களை வழங்குகின்றன. இந்த தகவல்களைத் தொகுத்து கலை வரலாற்றாசிரியர்கள் ஆங்கிலத்தில் மூன்று முக்கியமான நூல்களை எழுதியுள்ளனர்.
கலிங்கக் கோயில்கள் ஒரிசாவின் சில்ப நூல்களில் தேவயதனம், கிருஹம், வாசம், தேவகுலம், தாமம் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
(குறிப்பு: 1. ஒரிய மொழி கலைச்சொற்களில் வல்லினங்களின் சரியான உச்சரிப்பைத் தெரிவிப்பதற்காக அவற்றின் பின்னால் 1,2,3,4 ஆகிய எண்கள் இடப்பட்டுள்ளன. எகா க1 - क, க2 - ख, க3 - ग, க4 - घ. கலைச் சொற்கள் தேவநகரியிலும் அடைப்பு குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன.
குறிப்பு 2. 'அ' ஒசையில் முடியும் ஒரியக் கலைச் சொற்களைத் தமிழில் கையாள அவற்றுடன் 'ம்' சேர்க்கப்பட்டுள்ளது. எகா - தேவுல > தேவுலம்.)
விமான வகைகள்
கலிங்க விமானம் தேவுலம் (deul, देउल) என்று அழைக்கப்படுகிறது, அதன் வகைகள் மூன்று-
1. ரேக2 தே3வுலம் (rekha deul, रेख देउल)
2. கா2க2ரா தே3வுலம் (khakhara deul, खाखारा देउल)
3. பிடா4 தே3வுலம் (pidha deul, पिढा देउल)
காகரா = பூசணிக்காய். இவ்வகை விமானத்தின் மேல் உள்ள தலைப்புப் பகுதியின் வடிவத்தை வைத்து வந்த பெயர்.
காகரா வகை விமானம் சக்திக்கு உரியது. எண்ணிக்கையில் மிகவும் குறைந்தது.
![]() |
| ரேக தேவுலம் வளைகோட்டு (curvilinear) வடிவம். நாகர பாணியில் 'லதினா (latina)' எனப் பெயர். பண்ட தேவுலம் (Banda deul), புருலியா, மே.வ. படம் நன்றி: https://inditales.com/ |
![]() |
| பிடா வகை - பிரமிட் வடிவம் நாகர பாணியில் 'ப2ம்சன (phamsana)' எனப் பெயர். பாஸ்கரேஸ்வரர் கோயில், புவனேஸ்வர் படம் நன்றி: https://inditales.com/ |
ரேக, பிடா வகை விமானங்கள் சிவன், திருமாலுக்கு உரியவை.
ரேக தேவுலத்தின் தரை உள் வடிவம் சதுரமாகவும், பிடா வின் தரை உள் வடிவம் சதுரமாகவோ செவ்வகமாகவோ இருக்கும்.
பிடா வகை சில கோயில்களில் மேற்கண்டவாறு கருவறையை உள்ளடக்கிய விமானமாக இருந்தாலும், பொதுவாக ரேக வகை விமானத்தின் முன் அமையும் மண்டபங்களாகவே உள்ளன.
விமானத்தின் முன் அமையும் மண்டபங்கள்
1. ஜக3மோஹனம் (jagamohana, जगमोहन)
ரேக விமானத்தை அடுத்து அமைவது. மக்கள் தரிசனத்திற்காக கூடுமிடம். இவை இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதி கபிலி (kapili, कपिलि) (அந்தராளம்) எனப்படும்.
ரேக சிகரத்தை மணமகனாகவும், பிடா சிகரத்தை மணப்பெண்ணாகவும் கலிங்கக் கலைஞர்கள் குறிப்பிடுவர்.
பெரிய கோயில்களில் வழிபாட்டுத் தேவைகளுக்காக இன்னும் இரண்டு மண்டபங்கள் அமையலாம். இவையும் பிடா வகையைச் சார்ந்தவையே. அடுத்தடுத்த பிடா வடிவங்கள் உயரத்தில் குறைந்து காணப்படும்.
2. நாட மந்திரம் (nata mandira, नाट मन्दिर)
திருவிழா மண்டபம் (Festive hall). தேவதாசிகள் நடனம் ஆடுவதற்கான இடம். அதற்கான மேடை உடையது.10- 11 ஆம் நூற்றாண்டில் சோமவம்ஷி, கங்க மன்னர்கள் தேவதாசி முறையை அறிமுகப்படுத்தியதற்குப் பின் இவ்வகை மண்டபங்கள் கட்டப்படலாயின.
ரேக விமானம், மூன்று மண்டபங்கள் ஆகிய மேற்கண்ட நான்கு கட்டடங்களும் தனித்தனியானவை. ஆனால் ஒரே நேர் கோட்டு அச்சில் அமைந்து ஒரு மலைத்தொடரின் நான்கு சிகரங்கள் போன்ற தோற்றத்தை தருபவை.
![]() |
| 1. ரேக தேவுலம். 2. ஜக மோஹனம். 3. நாட மந்திரம். 4. போக மண்டபம் படம் நன்றி: sculpturepedia.com |
![]() |
| (படம் நன்றி: https://www.rachnakar.com/indian-temple-architecture-odisha-style/) |
இது கால வரிசையும் ஆகும். தொடக்கத்தில் ரேக தேவுலம் மட்டுமே இருந்தது. பின்னர் அதனுடன் ஜக மோஹனம் இணைந்தது. பிற்காலத்தில் நாட மந்திரும், போக மண்டபமும் சேர்ந்தன.
ரேக தேவுலத்தின் ரத வகைகள்
ரேக தேவுலத்தின் நான்கு பக்கங்கள் நெடுக்குப் பத்திகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ரத2கம் (rathaka, रथक) எனப்படும். ரதக த்திற்கு பகம் (paga, पग) என்றும் பெயர். கட்டுமான திட்டத்தில் ரதகம், மேற்பரப்பு தோற்றத்தில் பகம். (rathas on plan and pagas on elevation)
ரதகங்களின் எண்ணிக்கையை வைத்து ரேக தேவுலம் ஐந்து வகை - ஏக ரத, திரி ரத, பஞ்ச ரத, சப்த ரத, நவ ரத.
1. ஏக ரத - சமமான பத்திகள் இல்லாத பக்கங்களைக் கொண்ட வடிவம்.
2. திரி ரத (tri-ratha) - 3 ரதகங்கள்
- நடு ரதகம் - ராஹா பகம் (raha paga, राहा पग) - 1
- மூலை ரதகம் - க1னிக1 பகம் (kanika paga, कनिक पग) - 2
![]() |
| திரி ரதம் - 1, 3 - கனிக. 2 - ராஹா (This and the next two plans below: By Tangopaso - Own creation, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=20772311) |
![]() |
| திரி ரதம் - 1, 3 - கனிக. 2 - ராஹா |
3. பஞ்ச ரதம் (pancha ratha) - ஐந்து ரதகங்கள்.
- நடு ரதகம் - ராஹா பகம் - 1
- மூலை ரதகம் - க1னிக1 பகம் - 2
- இவற்றுக்கு இடையில் உள்ள ரதகம் - அனுரதம்’ (anuratha, अनु रथ) - 2
4. சப்த ரதம் (saptha ratha)- ஏழு ரதகங்கள்.
- நடு ரதகம் - ராஹா - 1
- மூலை ரதகம் - க1னிக1 - 2
- மூலை கனிக வை அடுத்து - அனுரதம் - 2
- ராஹா வை அடுத்து - அனு ராஹா (anu raha, अनुराहा) - 2
![]() |
| சப்த ரதம் 1,7 - கனிக. 4 - ராஹா. 2,6 - அனுரத. 3,5 - அனுராஹா |
5. நவ ரதம் - (nava ratha) - ஒன்பது ரதகங்கள்.
- நடு ரதகம் - ராஹா - 1
- மூலை ரதகம் - கனிக - 2
- மூலை கனிக பகத்தை அடுத்து - பரிகனிக பகம் (pari kanika paga, परिकनिक पग)
- அதை அடுத்து அனுரதம் - 2
- நடு ராஹா பகத்தை அடுத்து - அனு ராஹா - 2
கீழிருந்து மேலாக ரேக தேவுலம், பிடா தேவுல இரண்டுமே மூன்று அங்கங்களைக் கொண்டவை -
- பா3ட3ம் (bada, बाड) - கருவறையை உள்ளடக்கிய கீழ்ப்பகுதி
- க3ண்டி3 - (gandi, गन्डी) கருவறைக்கு மேல் உள்ள பகுதி
- மஸ்த1க1ம்- (mastaka, मस्तक) தலைப் பகுதி
![]() |
| ரேக விமான பாகங்கள் படம் நன்றி: sculpturepedia.com |
ஜகதி என்றும் பெயர். மேடை. இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். இது கங்கர்கள் (11-15 ஆம் நூற்றாண்டு) காலத்தில்தான் அமையத் தொடங்கியது. இது ரேக தேவுலம், பிடா தேவுலம் இரண்டிற்கும் பொதுவானது.
2. = பா3ட3ம் (bada, बाड)
கீழ்ப்பகுதி. நாகர பாணியில் மண்டோவரா (mandovara) என்று பெயர். இது கீழிருந்து மேலாக கீழ்க்கண்ட பகுதிகளை உடையது
- பா1பா4கம் (pabhaga, पाभाग)- அதிட்டானப் பகுதி (பா - பாதம்).
- ஜாங்க4ம் (jangha, जान्घ) - பித்திப் பகுதி - சுவர் - (ஜாங்க - கால்)
- ப3ரண்ட3ம் (baranda, बरन्ड) - ப்ரஸ்தரப் பகுதி.
மேற்கண்டது திரி அங்க (மூவங்க) பாடம். பிற்காலத்தில் கோயில்கள் உயரமான போது ஜாங்கம் மூன்று பாகங்களாகப் பிரிந்து பஞ்சாங்க (ஐந்து அங்க) பாடம் உருவாகியது.
- மேலே ‘உபர ஜாங்கம்' (upara jangha, उपर जान्घ)
- கீழே ‘தல ஜாங்கம்’ (tala jangha, तल जान्घ)
- இடையில் ‘பாந்தனா’ (bandhana, बान्धना).
பாபாகம்
பஞ்ச கர்மா என்னும் ஐந்து உறுப்புகள்கொண்டது. அவை கீழிருந்து மேலாக
- கு2ரம் ((Khura, खुर) - அடிபகுதி இதில் சிற்பங்கள், அலங்காரங்கள் அமைவதுண்டு.
- கும்ப4ம் - Kumbha, कुम्भ) - குடம். மங்களச் சின்னம்
- ப1ட1ம் - Pata, पट- தட்டையான நடுப் பகுதி
- கனி - Kani, कनी) - கூரிய விளிம்பாகக் குவியும் பகுதி,
- ப3சந்த1ம் - Basanta, बसन्त)- தட்டையான மேல் பகுதி
![]() |
| வலதுபுறம் ராஜாராணி கோயிலின் பாபாகம் |
பரண்டம்
பரண்டத்தில் 7 முதல் 10 உறுப்புகள் வரை உண்டு. அவை கீழிருந்து மேலாக.
- குரம் ((Khura, खुर)
- பத்மம் (Padma, पद्म)
- இடையில் மாறி மாறி ப1டி1 (Pati, पटी), கனி (Kani, कनी) உறுப்புகள் (படி , கனி, படி, கனி போல)
- பசந்தம் - (Basanta, बसन्त)
3. க3ண்டி3 (gandi, गन्डी)
உடல் - மேற்பகுதி.
ரேக தேவுலத்தில் கண்டியின் மூலை 'ரதக'மான 'கனிக பகம்', 'பூமி அம்லா (bhoomi amla, भूमि अम्ला)' எனப்படும் சக்கரங்களால் மேல்-கீழ் தளங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பூமி அம்லாக்கள் நெல்லிக்காயைப் போன்ற சுளை வடிவத்தைப் பெற்றிருப்பதால் இந்தப் பெயர். இரு 'பூமி அம்லா' க்களுக்கு இடைப்பட்ட பகுதி 'பூமி'.
![]() |
| பூமி அம்லாக்களும் பூமிகளும் (படம் நன்றி: indiancolumbus.blogspot.com) |
![]() |
| ராஜா ராணி கோயில் , புவனேசுவரம் (Thamizhpparithi Maari, CC BY-SA 3.0 <https://creativecommons.org/licenses/by-sa/3.0>, via Wikimedia Commons) |
அம்லா, கலசம் முதலியவை அடங்கிய தலைப் பகுதி- . மேல் உள்ள படத்தைப் பார்க்க
மஸ்தக உறுப்புகள் கீழிருந்து மேலாக -
- பே3கி1 (बेकि)- கிரீவப் பகுதி. பிசம த்தின் மீது உள்ள உள்ளொடுங்கிய வட்ட பாகம்.
- அம்லா(amla, अम्ला) - வட்டமான, நெல்லிக்காய் போன்ற வெளிப்புறம் உடைய தட்டையான உறுப்பு.
- க2பு1ரி (khapuri, खपुरी) (மண்டை ஓடு)/ சந்த்ரிகா (candrika) - தட்டையான மணி போன்ற வடிவம் கொண்ட உறுப்பு.
- அம்லசரிகா - சிறு அம்லா
- கலசம் (kalasa,कलश) - கலசம்.
- ஆயுதம் (ayudha, आयुध) - உள்ளுறை தெய்வத்தின் சின்னம். இது இறுதி மேல் உறுப்பு. சிவன் கோயிலில் திரிசூலம், திருமால் கோயிலில் இதில் துவஜம் எனும் கொடி கட்டப்பட்டிருக்கும்.
![]() |
| புவனேசுவரம் முக்தசுவரர் கோயிலின் மஸ்தகம் படம் நன்றி: Mike Prince from Bangalore, India, CC BY 2.0 <https://creativecommons.org/licenses/by/2.0>, via Wikimedia Commons |
முட (muda, मुड)
முட = மூடி. உயரமான பிற்கால ரேக தேவுலங்களில் ஓங்கி உயர்ந்து செல்லும் கட்டடத்தின் உறுதியைக் காக்க கருவறையின் மீது கட்டடத்தின் பக்கங்கள் எதிர்ப் பக்கங்களுடன் இரும்பு கம்பிகளினால் இணைக்கப்பட்டன. கருவறை மீது விதானம் போல் அமைந்த இந்த அமைப்பு 'கர்ப்ப முட' எனப்படும். கண்டியின் நடுவில் அதே போன்ற 'ரத்ன முட' எனும் இன்னொரு விதான அமைப்பு நிறுவப்பட்டது. லிங்கராஜர் கோயில் போன்ற மிக உயரமான தேவுலங்களில் ரத்ன முடவிற்கு மேல் கூடுதலாக ஒரு முட வும் உண்டு.
![]() |
| பிடா தேவுலத்தின் பாகங்கள் (from 'World Heritage Series KONARAK' published by ASI) |
![]() |
| இரு மஸ்தகங்கள் லிங்கராஜர் கோயில், புவனேஸ்வரம் SaileshPatnaik, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons |
காகரா தேவுலத்தின் பிஷ்டம், பாடம், ஜாங்கம் ஆகியவை மற்ற இரு வடிவங்களில் உள்ளதை போன்றதே. காகரா தேவுலம் செவ்வக வடிவம் உடையது. மஸ்தகத்தில் திராவிட கட்டடக் கலையின் சாலை வடிவச் சிகரம் போன்ற காகரா என்னும் பாகம் உடையது. அதன் மீது சிறு அம்லாக்களும் கலசங்களும் அமைகின்றன.
![]() |
| காகரா தேவுலம் - வைதாள் டேவுலம் புவனேசுவரம் (Nayansatya, CC BY 3.0 <https://creativecommons.org/licenses/by/3.0>, via Wikimedia Commons) |
மாற்றுப் பெயர்கள்

















.jpg)

Comments
Post a Comment